முகப்புBTC / SGD • கிரிப்டோகரன்சி
add
பிட்காயின் (BTC / SGD)
முந்தைய குளோசிங்
1,29,616.44
செய்தியில்
பிட்காயின் குறித்த விவரங்கள்
பிட்காயின் அல்லது நுண்காசு என்பது சத்தோசி நகமோட்டோவால் உருவாக்கப்பட்ட ஒரு எண்ணிம நாணயம் ஆகும். இது கணினி முறையால் வலைத்தளங்களில் செயலாக்கப்பட்டு, பரிமாற்றம் செய்யப்படுகின்றது. இப்பயன்பாட்டுக்காக அவர் உருவாக்கிய திறந்த மூல மென்பொருளும் இதே பெயராலேயே அழைக்கப்படுகிறது. பிட்காயின் என்பது தொடரேடு என்று அழைக்கப் படும் ஒரு வகை கணினி தொழில் நுட்ப முறையில் இயங்குகிறது.
பிட்காயினை வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளலாம்; பொருள்கள் வாங்கலாம்; மற்றும் சேமித்து வைக்கலாம். பொது வழக்கில் உள்ள பணம் ஒரு மைய வங்கியால் கட்டுப்படுத்தப்பட்டு மேலாண்மை செய்யப் படுகின்றது. ஆனால், பிட்காயின் என்ற இந்த கணினிக் காசு எந்த வங்கியாலும் மேற்பார்வை இடப் படுவது இல்லை; கட்டுப் படுத்தப்படுவதும் இல்லை. மாறாக, கட்டச்சங்கிலி என்ற மென்பொருளால் ஆன வரவுப் பதிவேட்டில் சேமிக்கப் பட்டு, பாதுகாக்கப் படுகின்றது. கட்டச்சங்கிலி என்பது ஒரு மென்பொருளால் ஆன வரவு-செலவு கணக்குப் புத்தகம். இது இணையர் வலையம் என்ற கணினி வலையத்தில் செயற்படுத்தப் பட்டு, அதில் உள்ள பல இணையர்களால் மேற்பார்வை இடப்பட்டு, இயங்கும் மென் பொருளாகும்.
பிட்காயினைக் கண்டு பிடித்தவர் சப்பானிய நாட்டைச் சேர்ந்த சத்தோசி நகமோட்டோ என்று கூறப்படுகிறது. எனினும் கண்டுபிடித்தவர் உண்மையில் யார் என்று தெரியவில்லை. Wikipediaசிங்கப்பூர் டாலர் குறித்த விவரங்கள்
சிங்கப்பூர் வெள்ளி என்பது சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் நாணயமாகும். இந்த நாணயத்தை சிங்கப்பூர் தவிர புரூணையிலும் உபயோகப்படுத்த முடியும். இந்நாணயம் $ அல்லது S$ ஆகிய குறியீடுகளால் குறிக்கப்படும். Wikipedia