முகப்புGBP / EUR • நாணயம்
add
GBP / EUR
முந்தைய குளோசிங்
1.19
செய்தியில்
பவுண்டு குறித்த விவரங்கள்
பிரித்தானிய பவுண்ட் என்பது ஐக்கிய இராச்சியத்தின் நாணய அலகாகும். ஒரு பவுண்ட் நூறு சதங்கள் ஆக பிரிக்கப்படுகிறது. இது பொதுவாக £ எனக் குறிக்கப்படுகிறது. உலகில் அதிக பெறுமதி வாய்ந்த நாணயங்களில் பவுண்ட் ஒன்றாகும். Wikipediaயூரோ குறித்த விவரங்கள்
ஐரோ அல்லது யூரோ என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 28 நாடுகளில், 19 நாடுகள் யூரோவை அதிகாரபூர்வ நாணயமாக கொண்டுள்ளன. ஆஸ்திரியா, சைப்ரஸ், எசுத்தோனியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பேர்க், மால்ட்டா, நெதர்லாந்து, போர்த்துக்கல், சிலோவேக்கியா, சுலோவீனியா, ஸ்பெயின் ஆகியவை இந்த 18 நாடுகளாகும். இந்நாணயம் ஒரு நாளில் 334 மில்லியன் ஐரோப்பியர்களால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் உலகெங்கும் 210 மில்லியன் மக்கள் யூரோவுடன் தொடர்புடய நாணயத்தை பயன்படுத்துகிறார்கள்.
"யூரோ" என்னும் வார்த்தை திசம்பர் 16,1995ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
1999ம் ஆண்டு சட்டரீதியாக உருவாக்கப்பட்ட இந்த நாணய முறை, 2002ம் ஆண்டு வரை மின் அஞ்சல் முறைப் பணம் பட்டுவாடா செய்யமட்டுமே உபயோகபப்படுத்தப்படது. பின்னர் 2002ம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களின் பழைய நாணய முறையை ஒழித்து, ஐரோ நாணய முறையை பயன்படுத்தத் தொடங்கியது.அமெரிக்க டாலருக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் நாணயம் யூரோ ஆகும். €942 பில்லியன் யூரோ அளவில் உலகில் அதிகப்படியான வங்கிப்பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.உலகில் இரண்டாவது பொருளாதார பலம் பொருந்தியதாக யூரோ வலயம் உள்ளது. Wikipedia